ஆம்னி பேருந்தில் கடத்திய 100 கிலோ குட்கா பறிமுதல்

பூந்தமல்லி: பூந்தமல்லி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, பாரிவாக்கம் சந்திப்பில் பூந்தமல்லி போலீசார் நேற்று காலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூரிலிருந்து வந்த தனியார் ஆம்னி பஸ்சில் இருந்து 3  மூட்டைகளை இறக்கி ஒரு நபர் காரில் ஏற்றிக்கொண்டிருந்தார். இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அந்த மூட்டைகளை பிரித்து பார்த்தனர். அதில் தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த நபரை போலீஸ்  நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தபோது குன்றத்தூரை சேர்ந்த ரவிச்சந்திரன்(37) என்பது தெரியவந்தது. குட்கா உள்ளிட்ட பொருட்களை பெங்களூரிலிருந்து ஆம்னி பஸ் மூலம் கடத்தியது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட  குட்காவின் மதிப்பு ₹10 லட்சம் என கூறப்படுகிறது. அவரை கைது செய்து 100 கிலோ குட்காவைவற்றை பறிமுதல் செய்தனர்.

Related Stories:

>