- பங்குனி உத்திரம் திருவிழா
- செல்லியம்மன் கோயில்
- Jayankondam
- குண்டவேலி கிராமம்
- ஜெயங்கொண்டம், அரியலூர் மாவட்டம்
ஜெயங்கொண்டம், ஏப். 20: ஜெயங்கொண்டம் அருகே பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு சாமி வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள குண்டவெளி கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவிலில் கடந்த 23-ந்தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.இதை தொடர்ந்து 5-ம் நாள் சாமி வீதியுலா நிகழ்ச்சியும்,அதை தொடர்ந்து பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் முன்னதாக மஞ்சள், சந்தனம், இளநீர், பால், தயிர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் நேற்று முன்தினம் இரவு 9-ம் நாள் திருவிழாவையொட்டி வீதியுலாவில் செல்லியம்மன், மாரியம்மன், விநாயகர் காத்தவராயன் மற்றும் பரிவார தெய்வங்கள் வீதியுலாவாக குண்டவெளி கன்னிக்கோவில் வழியாக மீன்சுருட்டி வடக்கு தெரு, காளியம்மன் கோவில் தெரு முக்கிய வீதிகள் வழியாக செல்லியம்மன் கோவிலை மீண்டும் வந்து அடைந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.
நேற்று பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு காவடி, அங்கப்பிரதட்சணம் நிகழ்ச்சி நடைபெற்றது.மேலும் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.கோவில் வளாகத்தில் அன்னதானம் நடைபெற்றது.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்கள் மணிவண்ணன், இளங்கோவன் செய்து இருந்தனர்.
