திருவள்ளூர், ஆவடி, கும்மிடிப்பூண்டியில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆவடி: பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து திருவள்ளூர், ஆவடி, கும்மிடிப்பூண்டியில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக சார்பில், நேற்று காலை ஆவடி மாநகராட்சி  அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு, மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் தலைமை தாங்கினார். கட்சி அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். மேலும், பூந்தமல்லி  தொகுதி எம்.எல்.ஏ ஆ.கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தார். முன்னதாக ஆவடி தெற்கு நகர பொறுப்பாளர் ஜி.ராஜேந்திரன் வரவேற்றார்.  இதில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் மாநில மாணவரணி நிர்வாகி  பூவை ஜெரால்டு, மாவட்ட நிர்வாகிகள் ஜெ.ரமேஷ், காயத்ரி தரன், ம.ராஜி, ஜி.ஆர்.திருமலை, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் பேபி வி.சேகர், பொன்.விஜயன், ஜி.நாராயணபிரசாத், என்.இ.கே.மூர்த்தி, தி.வை.ரவி, பூவை.ஜெயக்குமார்,  டி.தேசிங்கு, ஆர்.ஜெயசீலன், புஜ்ஜி.ராமகிருஷ்ணன், பூவை.ரவிக்குமார், தி.வே.முனுசாமி, தங்கம் முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர்: திருவள்ளூரில் மேற்கு மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி தலைமை தாங்கினார். திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். நகர  செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் ஆர்டிஇ.ஆதிசேசன், பொறுப்பு குழு உறுப்பினர்கள் கே.திராவிடபக்தன், எஸ்.சந்திரன், எஸ்.கே.ஆதாம், களம்பாக்கம் எம்.பன்னீர்செல்வம்,  பா.சிட்டிபாபு, மா.கோதண்டன், சரஸ்வதி  சந்திரசேகர், உ.சிவசங்கரி, பி.ரவீந்திரநாத், மு.நாகன், ஒன்றிய செயலாளர்கள் கூளுர் எம்.ராஜேந்திரன், மோ.ரமேஷ், கே.அரிகிருஷ்ணன், டி.கிறிஸ்டி மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமையில் கும்மிடிப்பூண்டி பயணியர் மாளிகையில் இருந்து 500க்கும் மேற்பட்ட திமுகவினர் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம்  எழுப்பியவாறு நேற்று பேரணியாக கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் வரை சென்றனர். தொடர்ந்து கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் சிலிண்டருக்கு பாடை கட்டி  ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் க.சுந்தரம், திமுக மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் சி.எச்.சேகர், பொறுப்புகுழு உறுப்பினர்கள் இ.ஏ.பி.சிவாஜி, பகலவன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமா மகேஷ்வரி,  டாக்டர் பரிமளம், அன்புவாணன், நிலவழகன், வழக்கறிஞர் வெங்கடாசலபதி, கோதண்டன், சுரேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெ.மூர்த்தி, பொதுக் குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன், மாவட்ட கவுன்சிலர்கள் ராமஜெயம், சாரதா  முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ஒன்றிய செயலாளர்கள் மு.மணிபாலன், செல்வசேகரன், ரமேஷ்ராஜ், சுகுமாறன், சக்திவேல், பேரூர் செயலாளர்கள் அறிவழகன், மோகன்ராஜ், மாவட்ட பிரதிநிதிகள் கி.வே.ஆனந்தகுமார்,  இஸ்மாயில், ஒன்றிய கவுன்சிலர்கள் இந்திரா திருமலை, ஜோதி உள்பட பலர்   பங்கேற்றனர்.

Related Stories:

>