- கார்த்திகை திருவிழா
- திருமயிலாடி முருகன் கோயில்
- கொள்ளிடம்
- திருமயிலடி
- மயிலாதுதுரை மாவட்டம்
- சுந்தரேஸ்வரர்
- இந்து சமய அறநிலையத்துறை
கொள்ளிடம், ஏப்.20: கொள்ளிடம் அருகே திருமயிலாடி முருகன் கோயிலில் கார்த்திகை திருவிழா நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே திருமயிலாடி கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான வரலாற்று சிறப்பு வாய்ந்த பிரகன்நாயகி உடனாகிய சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு எங்கும் இல்லாத வகையில் வடக்கு நோக்கி நிஷ்டையில் அமர்ந்து அருள் பாலித்து வரும் வடிவேல் குமரனுக்கு கார்த்திகை விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு,பிரகன்நாயகி, சுந்தரேஸ்வரர் மற்றும் முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைக்கு பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பின்னர் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் சார்பில் செய்திருந்தனர். இதேபோல் கொள்ளிடம் கோயிலில் உள்ள வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான், வடரங்கம் ஜம்புகேஸ்வரர் கோயிலில் உள்ள முருகபெருமான் உள்ளிட்ட கோயில்களில் நடைபெற்ற கார்த்திகை விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
