பள்ளிக்கு கைப்பந்து அரங்கம்

ஆவடி: ஆவடி எஸ்.எம். நகர் தமிழ்நாடு சிறப்பு காவல்படை குடியிருப்பு வளாகத்தில் உள்ள அரசினர் மேல்நிலை பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பலர் பல்வேறு உயர் பதவிகளில் பணியாற்றி வருகின்றனர். மேலும், இங்கு பயின்ற

முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைந்து பள்ளி வளர்ச்சிக்குழு அமைத்து, பல்வேறு நலத்திட்டங்களை செய்து பள்ளி முன்னேற்றத்தில் அக்கறையுடன் செயல்பட்டு வருகின்றனர். இந்த வளர்ச்சி குழு சார்பில் ₹3.50 லட்சம் செலவில் புதிய மின்னொளி கைப்பந்து அரங்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதனை மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் விழா அப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பள்ளி வளர்ச்சி குழுத்தலைவர் கே.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். பெற்றோர் - ஆசிரியர் கழக தலைவர் வக்கீல் ஆர்.பிரபு முன்னிலை வகித்தார்.

முன்னதாக தலைமை ஆசிரியர் மேரி ஆண்டனி வரவேற்றார். கலெக்டர் பொன்னையா கலந்துகொண்டு மின்னொளி கைப்பந்து அரங்கம் மற்றும் கல்வெட்டு ஆகியவற்றை திறந்துவைத்தார். இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, மாவட்ட கல்வி அலுவலர் கருணாகரன், ஆவடி தாசில்தார் செல்வம், பள்ளி வளர்ச்சிக்குழு நிர்வாகிகள், பெற்றோர் - ஆசிரியர் கழகத்தினர், முன்னாள் மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: