பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி, பிப்.23: பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை உயர்த்திய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திருச்சியில் முதன்மை செயலாளர் கே.என்.நேரு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயு விலையை கடுமையாக உயர்த்திய மத்திய அரசை கண்டித்தும், தட்டிக்கேட்காத மாநில அரசை கண்டித்தும், பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை உடனடியாக குறைக்க வேண்டும், மேலும்  விலை உயராமல் தடுக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சியில் மத்திய, வடக்கு மாவட்ட திமுக சார்பில் திருச்சி பழைய கலெக்டர் அலுவலக சாலையிலும், தெற்கு மாவட்ட திமுக சார்பில் சத்திரம் அண்ணாசிலை அருகிலும் முதன்மை செயலாளர் கே.என்.நேரு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அண்ணாசிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன் மற்றும் எம்எல்ஏக்கள் சவுந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பில் பெரியசாமி, பரணி குமார், கே.என்.சேகரன், வண்ணை அரங்கநாதன், கோவிந்தராஜ், கவிஞர் சல்மா, செந்தில், மலைக்கோட்டை பகுதி செயலாளர் மதிவாணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் குடமுருட்டி சேகர், பகுதி செயலாளர்கள் கண்ணன், காஜாமலை விஜி.மோகன் தாஸ், இளங்கோ, மாவட்ட பொருளாளர் டோல்கேட் சுப்ரமணி உள்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷமிட்டனர்.

Related Stories: