கலெக்டரிடம் மனு அரசு ஊழியராக அறிவிக்க கோரி அங்கன்வாடி ஊழியர்கள் விடியவிடிய காத்திருப்பு போராட்டம்

திருச்சி, பிப். 23: அரசு ஊழியர்களாக அறிவிக்க கோரி திருச்சியில் அங்கன்வாடி ஊழியர்கள் விடியவிடிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியராக்க வேண்டும். ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நேற்று திருச்சி பழைய கலெக்டர் அலுவலக சாலையில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் சுமார் 600க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட தலைவர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சித்ரா முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் ராணி உள்பட ஏராளமான ஊழியர்கள் கலந்துகொண்டனர். இரவிலும் போராட்டம் நீடித்தது. இரவு உணவை அங்கேயே சாப்பிட்டு விடியவிடிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: