பைக் மோதி மூதாட்டி பலி திருச்சி, பிப்.23: திருச்சியில் பைக் மோதி மூதாட்டி பலியானார்.

திருச்சி அரியமங்கலம் ெஜகநாதபுரத்தை சேர்ந்தவர் வீரராகவன் மனைவி நளினா (65). இவர் கடந்த 15ம் தேதி கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவதற்காக அமலோற்பவபுரம் பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தார். எதிரே வந்த பைக் இவர் மீது மோதியதில் தலை மற்றும் முதுகில் பலத்த காயமடைந்த நளினா சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>