தமிழ்நாட்டின் விடியல் எப்போதும் போல் துறைமுகம் தொகுதியில் பிரகாசமாக ஒளிரும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு உறுதி

சென்னை: ன்னை கிழக்கு மாவட்டம் துறைமுகம் சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் பி கே சேகர்பாபு இன்று காலை 9 மணி அளவில் 56 வது வட்டத்தில் உள்ள அப்பாராவ் கார்டன் பகுதியில் வாக்கு சேகரித்து பேசியதாவது: வடசென்னையின் நுழைவாயில் என்றாலே அது துறைமுகம் தொகுதி என்பது எல்லோரும் அறிந்த ஒன்று.. இங்கு வசிப்பவர்களிடம் எங்கு இருக்கிறீர்கள் என்று யாராவது கேட்டால் வடசென்னை என்று சொன்னவுடன் அவர்களது முகம் போகின்ற கோலத்தை மாற்ற வேண்டும் என்பதற்காக கழக தலைவர் தமிழ்நாடு முதல்வரிடம் உருவான வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் நாம் அடைந்த பலன்கள் என்னவென்றால் இத் தொகுதியில் 40, 50, ஆண்டு பழமையான மாநகராட்சி பள்ளிகளை இடித்துவிட்டு அப்பள்ளி மாணவர்கள் நவீன கல்வி பயில்வதற்காக அனைத்து வசதிகளும் உள்ளடக்கிய வகுப்பறைகள் மற்றும் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் போன்றவை கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.

துறைமுகம் சட்டமன்றத் தொகுதியிலுள்ள சுமார் 4500 மாணவிகள் படிக்கின்ற பாரதி மகளிர் கல்லூரிக்கு கூடுதல் கட்டடங்களும், ஆய்வு கூடங்களும் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளின் கோரிக்கையை ஏற்று புதியதாக பிரம்மாண்ட கலையரங்கம் கட்டுகின்ற பணியும் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இப்படி அறிவுத் திறனை வளர்க்கின்ற இந்த பணியின் தொடர்ச்சியாக உலக அரங்கில் எங்கும் இல்லாத வகையில் மாணவ மாணவியர்கள் போட்டித் தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ளும் வண்ணம் பல்வேறு துறை சார்ந்த புத்தகங்களை உள்ளடக்கிய நூலகங்களும், சுயமாக தொழில் செய்பவர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடத்திக் கொள்ளவும் வேலைக்கு செல்பவர்கள் தங்கள் பணியை வீட்டில் இருந்து பார்ப்பதற்கு போதிய வசதி இல்லாதவர்களுக்காகவும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அனைத்து வசதிகளும் கொண்ட முதல்வர் படைப்பகம் இன்றைய தினம் துறைமுகம் தொகுதியில் மூன்று கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து கொண்டிருக்கிறது. மேலும் சாலை வால்டாக்ஸ் சாலை, பிரகாசம் சாலை பகுதிகளில் இரண்டு முதல்வர் படைப்பகங்கள் கட்டுகின்ற பணியும் நடைபெற்று வருகிறது‌.

Related Stories: