×

வாட்டி வதைக்கும் வெயில் வீட்டில் முடங்கிய முதியவர்கள்

அரியலூர், ஏப். 19: கடந்த ஒரு மாதமாக தமிழகம் முழுவதும் குறிப்பாக அரியலூர் மாவட்டம் முழுதும் சுட்டெரிக்கும் கோடை வெயில் வாட்டி வதக்கி வருகிறது. தினமும் 100 டிகிரியை தாண்டியும் வெயில் வாட்டி வதக்கி வருகிறது. இதன் காரணமாக முதியவர்கள் வெப்பத்தை தாக்கு பிடிக்க முடியாததால், வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை விட்ட போதிலும் சிறுவர், சிறுமிகள் வெளியில் வெகு நேரம் விளையாட முடியாமல் தவிக்கின்றனர்.

கடந்தாண்டு கோடை காலத்தின் போது தமிழகத்தில் பரவலாக ஆங்காங்கு சிறிதளவு மழை பெய்து, அவ்வப்போது வெப்பத்தை தணித்து வந்தது. தற்போது மழையின்றி கடும் வெயில் வாட்டி வருவதால் அனைத்து தரப்பினர்களும் அவதியை சந்தித்து வருகின்றனர். மே மாதத்திலாவது கோடை மழை பெய்யுமா? என்ற எதிர்பார்ப்பில் அனைவரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : Ariyalur ,Tamil Nadu ,
× RELATED ராமேஸ்வரத்தில் பரபரப்பு பற்றி எரிந்தது படகு