சீனாவில் மனித உருவ ரோபோக்களின் செயல்திறன்னை சோதிக்கும் விதமாக மீண்டும் மாரத்தான் போட்டி

சீனா: சீனாவின் பெய்ஜிங் நகரில் மனித உருவரோபோக்களின் செயல்திறன்னை சோதிக்கும் விதமாக 2ஆவது அரை மாரத்தான் போட்டி ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. மனிதர்களை போலவே இயங்கக்கூடிய 300கும் மேற்பட்ட ரோபோக்கள் பங்கேற்கும் 21 கிலோ மீட்டர் பந்தயத்தில் சரிவு பாதைகள் மற்றும் பூங்காக்கள் போன்ற சவாலான நிலப்பரப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன.

சீனாவின் பொருளாதாரத்தில் ரோபோடிக்ஸ் துறையை ஒரு முக்கிய அங்கமாக மற்ற அரசு திட்டமிட்டுள்ள நிலையில் இந்த நிகழ்வு அந்த துறையின் தற்போதைய நிலையை வெளிப்படுத்தும் ஒரு காலமாக அமைகிறது. கடந்த ஆண்டு நடந்த போட்டியில் அனைத்து ரோபோக்கள் ரிமோட் மூலம் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில். இந்த முறை சுமார் 40 சதவீத ரோபோக்கள் எந்த மனித உதவியுமின்றி தன்னிச்சையாக அதாவது அட்டானமஸ் முறையில் இயங்க தயாராகி வருகின்றன.

கடந்த ஆண்டைவிட 5 மடங்கு கூடுதலாக சுமார் 70கும் மேற்பட்ட குழுக்கள் இதில் பங்கேற்கின்றன. இந்த முன்னேற்றம் குறித்து கருத்து தெரிவித்த தொழில்நுட்ப ஆலோசகர் ஜார்ஜ் ஸ்டெய்னர் ரோபோக்களின் பாகங்கள் மற்றும் பேட்டரி திறன் கடந்த ஆண்டைவிட எவ்வளவு மேம்பட்டுள்ளது என்பதை பார்ப்பதே இந்த போட்டியின் முக்கிய நோக்கம் என குறிப்பிட்டார்.

ரோபோடிக்ஸ் துறையில் சீனா உலக அளவில் முன்னணியில் உள்ளது. கவுண்டர்பாயிண்ட் ஆராய்ச்சி தரவுகளின் படி கடந்த 2025ஆம் ஆண்டில் உலகளவில் நிறுவப்பட்ட 16 ஆயிரம் மனித உருவ ரோபோகளின் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட ரோபோக்களை சீனா விநியோகித்துள்ளது.

Unitree நிறுவனம் தனது ஆண்டு உற்பத்தியை 75 ஆயிரமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது. அதேபோல் UBTech நிறுவனம் 2024கில் சொற்பமான எணிக்கையில் இருந்த தனது ரோபோக்களின் எண்ணிகையை 2025ல் ஆயிரத்திற்கு மேலாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு பத்தாயிரம் ரோபோக்களை வணிக ரீதியான பயன்பட்டிற்கு கொண்டுவர UBTech நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அதேசமயம் நிபுணர்கள் இதிலுள்ள நடைமுறை சவால்களையும் சுட்டிக்காட்டுகின்றனர். ரோபோக்கள் மாரத்தானில் ஓடுவது ஒரு தொழில்நுட்ப வளர்ச்சி மட்டுமே தவிர தொழிற்சாலைகளில் மனிதர்களுக்கு இணையாக செயல்படும் அளவிற்கு இன்னும் முதிர்ச்சி பெறவில்லை என்பது அவர்களின் கருத்து. தற்போதுள்ள ரோபோக்கள் பெரும்பாலும் ஆராய்ச்சி மற்றும் பொழுதுபோக்கு தேவைகளுக்கே பயன்படுகின்றன தொழிற்சாலைகளில் மனிதர்கள் செய்யும் துல்லியமான வேலைகளை செய்ய தேவையான செயற்கை நுண்ணறிவு அதாவது AI திறனை பெறுவதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என்றனர்.

கடந்த ஆண்டு போட்டியில் சில ரோபோக்கள் ஆரம்பத்திலேயே விழுந்தன. இந்த ஆண்டு Ultra போன்ற மேம்பட்ட மாடல்கள் சென்சார்களை பயன்படுத்தி மனிதர்களின் நடைமுறைகளை சரியாக பின்பற பயிற்சி பெற்றுள்ளன. இருப்பினும் அதிவேகமாக ஓடும்பொழுதிலும் நிகழ்நேரத்தில் முடிவுகள் எடுப்பது ரோபோக்களுக்கு சவாலான காரியமாக உள்ளது. தொழிற்சாலைகளில் மனிதர்களுக்கு இணையாக செயல்பட தேவையான தரவுகளை சேகரிக்கும் முயற்சியில் ரோபோக்கள் ஈடுபடுகின்றன, அதனால் இந்த போட்டி ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

 

Related Stories: