அரவக்குறிச்சி பகுதியில் சின்ன வெங்காயம் ரூ.200க்கு விற்பனை

மனநல ஆய்வுக்குழு கூட்டம்

அரவக்குறிச்சி, பிப் 23: அரவக்குறிச்சி பகுதியில் சிறிய வெங்காயம் விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. கிலோ ரூ200 க்குவிற்பனையாகின்றது. கடும் விலை உயர்வினால் சமையலுக்கு சுவை சேர்க்க முடியாமல் நடுத்தர வர்க்க இல்லத்தரசிகள் அவதிப்படுகின்றனர். விலையை கட்டுப்படுத்த பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்பப்படும் சின்ன வெங்காயத்தின் தேவை அதிகமாகஇருக்கும். இந்நிலையில்கடந்த 15 தினங்களாக சிறிய வெங்காயம் விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது, சென்ற மாதங்களில்ரூ 50 க்கு விற்றது, நேற்று அதிக விலையாக ரூ200 முதல் 250 வரை விற்கப்படுகின்றது.

அரவக்குறிச்சி பகுதியிலுள்ள காய்கறி வியாபாரிகள் கரூர், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட ஊர்களிலுள்ள மொத்த வியாபாரிகளிடமிருந்து வாங்கி வந்து இப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட சில்லறை காய்கறி கடையில் விற்பளை செய்கின்றனர்.மழையின் காரணமாக மொத்த வியாபாரிகளுக்கு சின்ன வெங்காய வரத்து குறைந்ததால் கொள்முதல் விலையே அதிகமாக உள்ளதால் சில்லறையிலும் அதிக விலைக்கு விற்க வேண்டிய நிலை உள்ளது என்று இப்பகுதி சில்லறை காய்கறி வியாபாரிகள் கூறுகின்றனர். இந்த விலை உயர்வு மார்ச் மாதம் வரை நீடிக்கும் என்று கூப்படுகின்றது.அரவக்குறிச்சி பகுதியில் சிறிய வெங்காயம் விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. கிலோ ரூ 200 க்குவிற்பனையாகின்றது. விலையை கட்டுப்படுத்த பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: