காசநோய் விழிப்புணர்வு முகாம்

கரூர், பிப். 23: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் காச நோய் விழிப்புணர்வு முகாம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது, மாவட்ட காசநோய் மையம் சார்பில் அதிகாரிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு முகாம் நடத்தினர். கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்களுக்கு காசநோய் குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் துண்டு பிரசுரங்களை வழங்கிய அவர்கள், நோயின் அறிகுறிகள், தாக்கம், பாதுகாக்கும் முறைகள் போன்றவை குறித்தும் அவர்களுக்கு விளக்கமளித்து பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>