ஓட்டல் உரிமையாளர் வீட்டு பூட்டை உடைத்து ரூ.7.25 லட்சம் நகை பணம் கொள்ளை

பெரம்பலூர்,பிப்.23: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அரும்பாவூர் பெரியாண்டவர் தெருவில், காவல்நிலையம் பின்புறம் குடியிருப்பவர் சதீ ஸ்குமார்(40). அரும்பாவூர் பாலக்கரை பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார்.

இவர் கடந்த 20ம்தேதி தனது குடும்பத்தாருடன் திருப்பதிக்கு சாமிகும்பிட சென்று விட்டார். உள்ளூ ரில் குடியிருக்கும் சதீஸ்குமாரின் மாமியார் தினமும் சதீஸ்குமாரின் வீட்டின் வாசலை பெருக்கி, கோலம் போட்டு வந்தார். நேற்று காலை சதீஸ்குமார் வீட்டு வாசலுக்கு கோலம்போட சென்ற அவரது மாமியார் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து மருமகன் சதீஸ்குமாருக்கும், காவல்நிலையத்திற்கும் தகவல் கொடுத்தார்.

அரும்பாவூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உள்ளிட்ட போலீசார் அங்கு சென்று திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டனர். அதில் வீட்டுக்குள் பீரோ உடைத்து திறக்கப்பட்டு கிடந்தது. அதிலிருந்த 15 பவுன் நகைகள், ரூ.2லட்சம் ரொக்க பணம் என மொத்தம் ரூ.7.25 மதிப்பில் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. காவல்துறையின் கைரேகை பிரிவு நிபுணர்கள் நேரில் வந்து கொள்ளையரின் கைரேகைகள் சேகரித்து சென்றனர். மேலும் அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Related Stories:

>