ஆட்டையாம்பட்டியில் கட்சி துண்டு, வேட்டிகள் தயாரிக்கும் பணி மும்முரம் நெசவாளர்கள் மகிழ்ச்சி

ஆட்டையாம்பட்டி, பிப்.23: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் ஆட்டையாம்பட்டியில், கட்சி துண்டு வேட்டிகள் தயாரிப்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளது. இதையடுத்து, ஆட்டையாம்பட்டியில் அனைத்து கட்சிகளின் கரை வேட்டிகள் மற்றும் துண்டுகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. குறிப்பாக ஆட்டையாம்பட்டி, வெண்ணந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், தயாரிக்கப்படும் வேட்டிகள் மற்றும் துண்டுகள் ஈரோடு ஜவுளி சந்தைகளுக்கு கொண்டு சென்று, விற்று வருகின்றனர். தறிக்கூடங்களில் தினசரி ஆயிரக்கணக்கான கட்சி கரை போட்ட துண்டு ,வேட்டிகள் உற்பத்தி செய்து வருகின்றனர்.  ஒரு துண்டின் விலை சராசரியாக ₹50 முதல் 70 வரை மொத்த விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கட்சி கரை போட்ட வேஷ்டி, துண்டுகள் அந்தந்த தேர்தல் காலத்தில் மட்டுமே சீசன் போல விற்பனை ஆகும். கொரோனோ காரணமாக கடந்த ஓராண்டாக முடங்கிய நெசவுத்தொழில் தற்போது சுறுசுறுப்பு அடைந்திருப்பது நெசவாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>