குழந்தையுடன் இளம்பெண் மாயம்

சேலம், பிப்.23: பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் அஜித்குமார். இவருடைய மனைவி அனிதாதேவி (24). இவர்களுக்கு மூன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. அஜித்குமார் சேலம் குரும்பப்பட்டி பகுதியில் மனைவி மற்றும் குழந்தையுடன் தங்கியிருந்து அப்பகுதியில் உள்ள பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த 20ம் தேதி பணிக்கு சென்றுவிட்டு திரும்பியபோது வீட்டில் மனைவி, குழந்தை இல்லாததை கண்டு திடுக்கிட்டார். பல்வேறு இடங்களில் இருவரையும் தேடியும் கிடைக்கவில்லை. அவருடன் வேலைபார்த்த பாதல் என்ற நண்பரையும் காணவில்லை. இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனில் அஜித்குமார் புகார் அளித்தார். பாதலும் மாயமானதால், அனிதாதேவி குழந்தையுடன் அவருடன் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>