ஓடும் லாரியில் டிரைவர் திடீர் சாவு

சேலம், பிப்.23: சேலம் எருமபாபாளையம் பைபாஸ் சாலையில், பார்சல் லாரி ஒன்று சாலையில் நிறுத்தப்பட்டிருந்தது. லாரிக்குள் டிரைவர் இறந்து கிடந்தார். இதுகுறித்த தகவலின் பேரில், அன்னதானப்பட்டி போலீசார் விரைந்து சென்று, டிரைவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், இறந்து கிடந்தவர், சேலம் மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்த ராஜா(54) என்பது தெரிய வந்தது. சேலம் நாழிக்கல்பட்டியில் உள்ள தனியார் பார்சல் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். நேற்று அதிகாலை 4.30மணிக்கு பார்சல்  நிறுவனத்தில் இருந்து, லாரியில் லோடு ஏற்றிக்கொண்டு திருப்பதி புறப்பட்டார். எருமாபாளையம் பைபாஸ் அருகே வந்த போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அதனால், லாரியை சாலையோரம் நிறுத்தி விட்டு உயிரிழந்தது  தெரியவந்தது. இதுபற்றி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

>