கலெக்டர்அலுவலகம் முன்பு மூதாட்டி தீக்குளிக்க முயற்சி

சேலம், பிப்.23: சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள்குறைதீர் கூட்டம் நடந்தது. இதையொட்டி போலீசார் கலெக்டர் அலுவலகம் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு வந்த மூதாட்டி பையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ெணய் பாட்டிலை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைபார்த்த போலீசார் உடனே அதை தடுத்து, மூதாட்டியிடம் விசாரித்தனர். இதில்,அந்த மூதாட்டி சேலம் செவ்வாய்பேட்டை பெரிய எழுத்துகாரர் தெருவை சேர்ந்த தவமணி(62) என்பது தெரிந்தது. மேலும், தனது அடுக்குமாடி வீட்ைட மகன்கள் எடுத்துக்கொண்டு தன்னை கவனிப்பதில்லை எனவும், தனது வீட்டை பெற்றுத் தரவேண்டும் எனவும் செவ்வாய்பேட்டை போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதாக போலீசாரிடம் மூதாட்டி தெரிவித்தார்.

Related Stories:

>