விளம்பர பேனர்கள் வைப்பு அகற்ற மக்கள் வலியுறுத்தல்

நீதிமன்ற உத்தரவை மீறி

ஓமலூர், பிப்.23: அரசியல் கட்சிகளின் விளம்பர பேனர்கள் வைப்பதற்கு, சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. ஓமலூரில் அதிமுகவினர் எம்எல்ஏ மற்றும் சேர்மன் ஆகியோரை வரவேற்பதற்கு கூட பேனர்கள் வைக்கின்றனர். முத்துநாயக்கன்பட்டி, ஓமலூர், காடையாம்பட்டி, சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஓரங்களிலும், பிரமாண்டமாக பேனர்களை வைத்துள்ளனர். சேலத்தில் நடைபெற்ற பாஜக இளைஞரணி மாநாட்டிற்கு வந்த ராஜ்நாத்சிங்கை வரவேற்று, காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து சேலம் வரை பாஜகவினர்  தமிழிலும், இந்தியிலும் வரவேற்பு பேனர்களை வைத்துள்ளனர். நிகழ்ச்சி முடிந்த நிலையிலும் பேனர்களை அகற்றாமல் அப்படியே வைத்துள்ளனர். இதனால், வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கனரக வாகனங்கள் வந்தால் சாலையோரம் ஒதுங்க முடியாமல் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>