நாமக்கல்லில் 203 பேருக்கு வீட்டுமனை பட்டா பாஸ்கர் எம்எல்ஏ வழங்கினார்

நாமக்கல், பிப்.23: நாமக்கல் பகுதியில் அரசு புறம்போக்கில் 10 ஆண்டுக்கு மேலாக, குடியிருந்து வரும் வீட்டின் உரிமையாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் வயதானவர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி, நேற்று பிடிஓ அலுவலகத்தில் நடைபெற்றது. தாசில்தார் கதிர்வேல் தலைமை வகித்தார். ஒன்றியக்குழு துணை தலைவர் ராஜா வரவேற்று பேசினார். இதில் நாமக்கல் எம்எல்ஏ பாஸ்கர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, ஆவல்நாயக்கன்பட்டி, மரூர்பட்டி, வேட்டாம்பாடி, செல்லப்பா காலனி ஆகிய ஊர்களை சேர்ந்த 203 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் 47 பேருக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், ஒன்றியக்குழு தலைவர் சுமதி, மயில்சுந்தரம், ராஜா ரகுமான், கார்த்திகேயன், முருகேசன், குமார், ராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>