அரசு கலைக் கல்லூரியில் தாய்மொழி கருத்தரங்கம்

நாமக்கல்,  பிப்.23: உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு, நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு  கல்லூரியின் செஞ்சுருள் சங்கம் சார்பில், ‘கல்வியில் தாய்மொழி’ என்ற  தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. வணிகவியல்  துறைத்தலைவர் ராஜ்குமார் வரவேற்றார். கல்வியில் தாய்மொழி  என்னும்  தலைப்பில் கல்லூரியின் முதல்வர் முருகன் தலைமை வகித்து பேசுகையில்,  ‘தாய்மொழி, நம்மை அறியாமல் இயல்பாக மூளையில் பதியும். இன்னொரு மொழி வழியாக  கல்வி கற்றால், முதலில் மொழியை கற்க வேண்டும், பிறகு அந்ததுறை சார்ந்த  அறிவைக் கற்கவேண்டும். ஆனால், தாய்மொழி வழியாக கற்றால், இயல்பாக இருக்கும்  மொழி அறிவால், சிறப்பாகக் கற்க முடியும். தாய்மொழி வழியாகக் கற்றால்,  சிந்தனை உருவாகும். சிந்தனை பல்வேறு கண்டு பிடிப்புகளை உருவாக்கும்,’  என்றார். இந்த கருத்தரங்கில் செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர் சந்திரசேகரன், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: