வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி, பிப்.23: கிருஷ்ணகிரியில், வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 6வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கலெக்டர் அலுவலகம் முன் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். அலுவலக உதவியாளர் முதல் தாசில்தார் வரை அனைத்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன், நகராட்சி,  மாநகராட்சி ஊழியர் சங்க பொறுப்பாளர் வெங்கடேசன், முன்னாள் மாவட்ட  பொறுப்பாளர்கள் ஜெய்சங்கர், பெருமாள், இளங்கோ, ஜெயபிரபா கலந்து கொண்டனர்.

Related Stories:

>