தேமுதிக ஆலோசனை கூட்டம்

ஓசூர், பிப்.23: ஓசூர் அருகே மத்திகிரியில் தேமுதிக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஓசூர் மாநகர் மாவட்ட செயலாளர் ராமசாமிரெட்டி தலைமை  வகித்தார். அவைத்தலைவரும், ஓசூர் தொகுதி பொறுப்பாளருமான சரவணன் வரவேற்றார். தேமுதிக துணை செயலாளரும், உயர்மட்ட குழு உறுப்பினரும், மண்டல பொறுப்பாளருமான எல்.கே.சுதீஸ் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி பேசினார். மேலும், தேமுதிக கொடியேற்றி வைத்தார். நிகழ்ச்சியில் தேர்தல் பிரிவு செயலாளர் மணிகண்டன், மாநில வர்த்தகரணி துணை செயலாளர்  சீனிவாசமூர்த்தி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் முருகேசன் ஆகியோர் பேசினர். ஒன்றிய செயலாளர் கண்ட்ராயன் நன்றி கூறினார்.

Related Stories:

>