பாடப்பிரிவு தொடக்க விழா
அருர், பிப்.23: அரூர் கல்வி மாவட்டத்தில் உள்ள நரிப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் பெண்கள் அழகுபடுத்துதல் மற்றும் வேளாண்மை ஆகியவற்றுக்கான புதிய பாடப்பிரிவுகள் தொடக்க விழா நடந்தது. அரூர் எம்எல்ஏ சம்பத்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, அரூர் கல்வி மாவட்ட அலுவலர் பொன்முடி, பள்ளி துணை ஆய்வாளர் பொன்னுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.