கிராம சபை கூட்டம் நடத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

தர்மபுரி, பிப்.23: பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலம் முன், கிராம சபை கூட்டம் நடத்தக்கோரி, நமது கிராமசபை இயக்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் விநாயகமூர்த்தி தலைமை வகித்தார். மாநில துணை செயலாளர் முனியப்பன், மாநில பொருளாளர் தேவராஜ் மற்றும் நிர்வாகிகள் சுப்ரமணியம், விஜயராகவன், சக்திகுமரன், கிருஷ்னன், எம்ஜி உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பாலக்கோடு பஸ் நிலையத்திலிருந்து ஊர்வலமாக வந்து, துணை பிடிஓ பழனியிடம் மனு அளிக்கப்பட்டது. இதேபோல், தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், கொரோனாவை காரணம் காட்டி, ஓராண்டுக்கும் மேலாக கிராம சபை கூட்டம் நடத்தப்படாமல் உள்ளது. கிராம சபை கூட்டம் நடத்தாமல் இருப்பது உள்ளாட்சிகளில் அதிகமாக முறைகேடுகள் நடக்க ஏதுவாக அமையும். எனவே, உடனடியாக கிராம சபை கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>