ஒகேனக்கல் அருகே அரசு பஸ், ஆட்டோ மோதி விபத்து

பென்னாகரம், பிப்.23: ஒகேனக்கல்லில் இருந்து பென்னாகரம் நோக்கி அரசு பஸ் சென்றது. அப்போது பென்னாகரத்தில் இருந்து ஒகேனக்கல் நோக்கி சென்ற ஆட்டோ முண்டச்சிபள்ளம் பகுதியில் சென்ற போது ஆட்டோவும், பஸ்சும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோ டிரைவர் விஜயகுமார்(22), ஆட்டோவில் வந்த கோவிந்தராஜ்(45) உள்ளிட்ட 3பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த ஒகேனக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, காயமடைந்தவர்களை மீட்டு, பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: