பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மா.கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

பாப்பாரப்பட்டி, பிப்.23: பாப்பாரப்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டார செயலாளர் சின்னசாமி தலைமை வகித்தார். வட்டார குழு உறுப்பினர் முகிலன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஸ்வநாதன் பேசினார். மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கோஷ மிட்டனர். சமையல் காஸ் சிலிண்டருக்கு மாலையிட்டு கோஷங்கள் எழுப்பினர். இதில், நிர்வாகிகள் ராஜாமணி, சிலம்பரசன், ராஜசேகரன் மணிகண்டன், பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சக்திவேல் நன்றி கூறினார்.

Related Stories:

>