மாதேஸ்வரன் கோயிலில் தீர்த்தக்குட ஊர்வலம்

பென்னாகரம், பிப்.22: பென்னாகரம் அருகே பூக்கடை மருதவல்லி ஊராட்சி, கரியம்பட்டி பெரியதோட்டம் புதூர் பகுதியில், சுமார் 30ஆண்டுகள் பழமை வாய்ந்த ஊத்துக்குளி மலை மாதேஸ்வரன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேக விழாவிற்காக கரியம்பட்டி, பெரியதோட்டம் புதூர், கொட்டாவூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 100க்கும் மேற்பட்டோர், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் புனித நீராடினர். பின்னர், காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் மற்றும் பால்குடம் எடுத்து கொண்டு, பென்னாகரம் பேருந்து நிலையம், கடைவீதி, புதிய பேருந்து நிலையம் இந்திரா நகர் வழியாக கரியம்பட்டி பகுதிக்கு ஊர்வலமாக சென்றனர். இதில் கோயில் தர்மகர்த்தா ஒப்பந்ததாரர் பிரகாஷ், மாணிக்கம், கோயில் அர்ச்சகர்கள் சின்னசாமி, தங்கதுரை மற்றும் முக்கியஸ்தர்கள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் அன்பு, ராஜேந்திரன், மாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Related Stories: