கிணற்றில் மூழ்கி தொழிலாளி பலி

அரூர், பிப்.23: மொரப்பூர் அருகே உள்ள வகுத்துப்பட்டியை சேர்ந்தவர் குப்பன்(55). கூலி தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள வெற்றிவேலன் என்பவரது விவசாய கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்து மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து, மொரப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>