அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

தர்மபுரி, பிப்.23: தர்மபுரி மாவட்டம் வடக்குதெரு கொட்டாவூர் ஓம்சக்தி காந்தாதேவி அம்மன் கோயிலில், கும்பாபிஷேக விழா கடந்த 16ம் தேதி துவங்கியது. 21ம் தேதி காலை முளைப்பாரி மற்றும் சாமி ஊர்வலம் நடந்தது. 22ம் தேதி நேற்று காலை நாடி சந்தானம், மகா பூர்ணாஹூதி நடந்தது. காலை 9 மணிக்கு தீர்த்தக்குடம் புறப்பாடு நடந்தது. காலை 10 மணிக்கு பாலகணபதி, பாலமுருகன், ஐயப்பன், ஓம் சக்தி காந்தாதேவி அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 9மணிக்கு அம்மன் நாடகம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories:

>