ஆலந்தூர்: சென்னை ஆலந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் தா.மோ.அன்பரசனை ஆதரித்து ஆலந்தூர் 165 வது வார்டுக்கு உட்பட்ட நங்கநல்லூர் பகுதியில் காங்கிரசார் வாக்கு சேகரித்தனர். தென் சென்னை மேற்கு மாவட்டம் ஆலந்தூர் 165 வது வார்டுக்கு உட்பட்ட நங்கநல்லூர் இந்திராநகர் பகுதியில் தென் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் சுதா பிரசாத் தலைமையில் காங்கிரசார் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.
அப்போது பொதுமக்களிடம் சுதா பிரசாத், ‘’தா.மோ அன்பரசன் இந்திரா நகர் பகுதிக்கு பட்டா வாங்கி தருவதாக உறுதி அளித்துள்ளார். அவர் வெற்றி பெற்றால் மட்டுமே இது நடக்கும் என்பதால் அவருக்கு வாக்களித்து மகத்தான வெற்றி பெற செய்யவேண்டும்’ என்றார். அவருடன் பகுதி தலைவர்கள் வி.ரமேஷ், ஆதம் பிரகாஷ், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.ரமேஷ், முன்னாள் கண்டோண்ட்மென்ட் பகுதி தலைவர் கோகுல கிருஷ்ணன், காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர்கள் நேரு ரோஜா, ஐ.செல்வம், ஸ்டீபன் தாமஸ், மாவட்ட நிர்வாகி சரளா, வட்ட தலைவர்கள் கோ.சந்தானம், ரவிக்குமார், எஸ்.பாரதி, கே.வி.ஏழுமலை, சரவணன், மகாராஜன், வேலு, மாயவன், ரவி ராஜ், வெங்கடேசன், அபிஷேக், விஷால், ஆலந்தூர் தெற்கு பகுதி மகளிர் அணி துணை அமைப்பாளர் தீபா கோபி, இளைஞரணி கோபி ஆகியோர் வாக்கு கேட்டனர்.
