கமுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள்

கமுதி, பிப்.23: கமுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள் வழங்கப்பட்டது. கமுதி வட்டாரத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, கடந்த டிசம்பர் மாதம் நேரடி தேர்வு முகாம் நடைபெற்றது. இதில் மருத்துவர்களைக் கொண்டு தேர்வு செய்து, அவர்களுக்கு ஏற்ற உபகரணங்களை நேற்று கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன் தமிழ்ச்செல்வி போஸ் தலைமையில் 65 பேருக்கு வழங்கப்பட்டது. இந்திய செயற்கை அவயங்கள் உற்பத்தி கழகம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை இணைந்து ரூ.7 லட்சத்து 11 ஆயிரம் மதிப்பில் மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, காதொலி கருவி, செயற்கை கால்கள் முடநீக்கு கருவி, ஊன்று கோல்கள் போன்றவை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் தங்கபாண்டியன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக முடநீக்கு வல்லுநர் ஜெய்சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: