பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம், பிப்.23: ராமநாதபுரத்தில் பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் அரண்மனை முன்பு திமுக சார்பில் பெட்ரோல்,டீசல், சமையல் காஸ் விலையேற்றத்தை கண்டித்து நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்டபொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் முன்னாள் எம்பி பவானி ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, மாவட்ட குழு தலைவர் திசை வீரன், செயற்குழு உறுப்பினர்கள் அகமதுதம்பி, குணசேகரன், நகர செயலாளர்கள் கார்மேகம், பிரவீன், நாசர்கான், ஜீவரத்தினம், ஒன்றிய பொறுப்பாளர்கள் பிரபாகரன், ஜீவானந்தம், புல்லாணி கதிரவன், வாசுதேவன், முன்னாள் மாவட்ட செயலாளர் திவாகர் மற்றும் ஜலில், பாலு மற்றும் நிர்வாகிகள்,தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: