வாக்காளர் பட்டியலில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் பெயர் நீக்கம்

சிதம்பரம், ஏப். 16: கடலூர் மாவட்டம் சிதம்பரம் வடக்கு மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் சித்தார்த்தன். இவர் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவராக உள்ளார். இந்நிலையில் வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் வெளியிட்டபோது, சித்தார்த்தன் பெயர் அதில் இருந்தது. இதை தொடர்ந்து சட்டமன்ற தேர்தலில் பணியாற்றுவதற்காக பூத் சிலிப் வாங்க நேற்று சென்றுள்ளார். அப்போது அங்கு பூத் சிலிப் புத்தகத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து சித்தார்த்தன் பெயர் நீக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது திட்டமிட்டு செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர். மேலும் இது குறித்து சிதம்பரம் தேர்தல் அதிகாரிகளிடம் காங்கிரஸ் கட்சியினர் பேசி வருகின்றனர். வாக்காளர் பட்டியலில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெயர் நீக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: