×

இந்தியாவை ஒரே ஒரு மத அடையாளத்திற்குள் அடக்க முடியாது: உச்சநீதிமன்ற நீதிபதி கோட்டிஸ்வர் சிங் கருத்து

டெல்லி: 21 ஆம் நூற்றாண்டில் சட்டம் மற்றும் நீதியை மறுபரிசீலனை செய்தல்: சவால்கள், பொறுப்புக்கூறல் மற்றும் சீர்திருத்தம்” என்ற கருப்பொருளில் நடைபெற்ற தேசிய சட்ட நிறுவனம் பல்கலைக்கழக மாணவர் வழக்கறிஞர் சங்கத்தின் (NLIU-SBA) சட்ட மாநாடு 2026-ல் உச்ச நீதிமன்ற நீதிபதி கோடீஸ்வர் சிங் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது.
இந்தியாவை ஒரே ஒரு மத அடையாளத்திற்குள் அடக்க முடியாது. இந்தியாவைப் போல அனைத்து மதங்களையும் பின்பற்றும் நாடுகள் மிகச் சிலவே உள்ளன. இந்தியா தன்னை ஒருபோதும் இந்து நாடாக அறிவித்துக் கொண்டதில்லை. இந்து என்ற வார்த்தைக்கு எந்த அர்த்தமும் இல்லை. ‘இந்து’ என்ற சொல்லே, சிந்து நதிக்கு அப்பால் வசிக்கும் மக்களைக் குறிக்க, வெளிநாட்டினரால் நமக்கு வழங்கப்பட்ட ஒரு சொல்லாகும்.

எனவே, என் புரிதலைப் பொறுத்தவரை, ‘இந்துக்கள் என்றால் என்ன?’ என்ற கேள்விக்கு எந்த அர்த்தமும் இல்லை. என்னுடன் உடன்படாதவர்கள் இருக்கலாம், ஆனால் ‘இந்து’ என்ற சொல் எதையும் குறிக்கவில்லை. ‘இந்து’ என்பவர்கள் சிந்து நதிக்கு அப்பால் வசிப்பவர்கள் மட்டுமே.

அரசியலமைப்புச் சட்டமானது, இந்தியாவின் சுதந்திர கால தொலைநோக்கையும் இலட்சியங்களையும் வரையறுத்ததுடன், நாட்டின் எதிர்காலத்தையும் தொடர்ந்து வடிவமைத்து வருகிறது.

Tags : India ,Supreme Court ,Justice ,Gotteswar Singh ,Delhi ,National Law Institute University Student Advocate Association ,NLIU-SBA ,Law Conference 2026 ,
× RELATED ஊழல் செய்வதில் பாஜக, திரிணாமுல்...