விவசாய நிலத்தில் மின்வேலி அமைத்தால் வழக்கு மேற்பார்வை பொறியாளர் எச்சரிக்கை

வேலூர், பிப்.21: வேலூர் மின் பகிர்மான வட்டத்தில் விவசாய நிலங்களுக்கு மின்வேலி அமைத்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று மேற்பார்வை பொறியாளர் ராஜன் ராஜ் தெரிவித்தார். வேலூர் மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் பொதுமக்கள் மின்வேலி அமைப்பதினால் மின் விபத்துகள் மற்றும் உயரிழப்புகள் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்கள் விவசாய நிலம் மற்றும் தோட்டங்களில் விலங்குகள் வராமல் இருப்பதற்காக மின்வேலி அமைப்பது இந்திய குற்றவியல் சட்டப்பிரிவு 304ஏ மற்றும் Violation பிரிவு 39, 44(டி) படியும், இந்திய மின்சட்டம் 1910 பிரிவு 46ன் படியும் தண்டனைக்குரிய குற்றமாகும். மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். எனவே பொதுமக்கள் தங்கள் விவசாய நிலங்களில் மின்வேலி அமைப்பதை தவிர்க்குமாறும், மின்சாரத்தை தவறான வழிகளில் பயன்படுத்த வேண்டாம் என்று வேலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ராஜன்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: