×

தேர்தல் டெஸ்டில் விஜய் பாஸ் ஆவாரா? டீ போட்டு கொடுத்து நடிகை கவுதமி கேள்வி

அதிமுக கொள்கை துணை பரப்பு செயலாளரும், நடிகையுமான கவுதமி அணைக்கட்டு தொகுதி அதிமுக வேட்பாளர் வேலழகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்குகளை சேகரித்தார். அப்போது அங்குள்ள ஒரு டீ கடையில் டீ போட்டு கொடுத்து வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது அந்த டீ போட தயாரான கவுமதி, ‘நான் காபி நல்லா போடுவேன். டீ எனக்கு தெரியாது’ என்றார். உடனே, அந்த டீக்கடைக்காரர் காபி பவுடரை எடுத்து கொடுத்தார். அதற்கு கவுதமி, ‘பராவயில்லை, நான் டீ போடுகிறேன்’ என கூறி டீ போட்டு கொடுத்தார்.

பின் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுகவின் தேர்தல் அறிக்கை மக்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. தற்போது இருக்கக்கூடிய நிலையைத் தாண்டி அடுத்த கட்ட நிலைக்குமக்கள் செல்லும் அளவிற்கு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. முதியோர் வாக்கு தவறாக பயன்படுத்தியவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்க வேண்டும். நடிகர் விஜய் சினிமாவில், ஒரு மிகப்பெரிய ஸ்டார் நடிகர்.

அவரை பார்ப்பதற்கு கூட்டம் வரத்தான் செய்யும். சினிமாவிற்கும் நடிகர்களுக்கும் இருப்பது தனிப்பட்ட பந்தம். சினிமா பார்க்கிறார்கள் ரசிக்கிறார்கள் அவர்கள் நேரில் வரும்போது அவர்களை பார்க்க கூட்டம் சேர்கிறார்கள். அதுவே வாக்காக மாறுமா என்பது ஒரு தேர்தலை சந்தித்தால் தான் தெரியும். எதுவாக இருந்தாலும் ஒரு தேர்தலை சந்தித்து அந்த டெஸ்டில் பாஸ் ஆனால்தான் தெரியும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Vijay ,Gauthami ,AIADMK ,Deputy Publicity Secretary ,Velazhagan ,Anikuttu ,
× RELATED டெல்லி ஏகாதிபத்தியத்தின் முனை முறிந்து நொறுங்கி போகும்: வைகோ ஆவேசம்