ஆந்திராவிலிருந்து சின்னசேலத்துக்கு ரயிலில் 52,366 மூட்டை பச்சரிசி வந்தது

சின்னசேலம், பிப். 21: ஆந்திராவிலிருந்து சின்னசேலம் ரயில் நிலையத்திற்கு சரக்கு ரயிலில் இருந்து 52 ஆயிரத்து 366 மூட்டை பச்சரிசி வந்து இறங்கியது. சின்னசேலம் ரயில் நிலையத்திற்கு அருகில் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு உள்ளது. ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் போன்ற வெளி மாநிலங்களில் இருந்து அவ்வப்போது இந்த குடோனுக்கு சரக்கு ரயில்மூலம் அரிசி மூட்டைகள் வந்திறங்கும். அவ்வாறு வந்து இறங்கும் அரிசி மூட்டைகளை சேமிப்பு கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டு பின் லாரிமூலம் விழுப்புரம், கடலூர், சேலம் போன்ற மாவட்டங்களுக்கு பொது விநியோக திட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.

அதைப்போல நேற்று காலை ஆந்திர பிரதேசம் பார்வதிபுரம் பகுதியில் இருந்து சரக்கு ரயில்மூலம் 42 ரயில் பெட்டிகளில் 52366 மூட்டை (2631 மெட்ரிக் டன்) பச்சரிசி சின்னசேலம் ரயில் நிலையத்தில் உள்ள உணவுப்பொருள் இறங்கு தளத்திற்கு வந்தது. இதையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட மூட்டை தூக்கும் தொழிலாளர்களை கொண்டு ரயில் பெட்டிகளில் இருந்து மூட்டைகளை இறக்கி லாரிகளில் ஏற்றி சின்னசேலம் தமிழ்நாடு சேமிப்பு குடோனில் அடுக்கி வைக்கப்பட்டது.

Related Stories:

>