பெலாக்குப்பத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திண்டிவனம், பிப். 21: திண்டிவனம் அருகே சிப்காட் அமைய உள்ள இடத்தை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.திண்டிவனம்-செஞ்சி சாலையில் உள்ள பெலாக்குப்பம் பகுதியில் 281 ஹெக்டேர் இடத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைய உள்ள இடத்தை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சிப்காட் வட்டாட்சியர்கள் செந்தில்குமரன், அலெக்சாண்டர், தமிழ்ச்செல்வி ஆகியோருடன் வரைபடங்களை பார்வையிட்டும், நிலம் சம்பந்தமாகவும் ஆய்வு செய்தார். ஆய்வின் போது நில அளவையாளர்கள் ஜெயச்சந்திரன், ஆரோக்கியராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories:

>