கிணற்றில் மூதாட்டி மர்ம சாவு

திண்டிவனம், பிப். 21: திண்டிவனம் அருகே விவசாய கிணற்றில் மூதாட்டி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கீழ் எடையாளம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் மனைவி முத்தம்மாள் (75). இவரது மகளை தென்களவாய் பகுதியில் திருமணம் செய்து கொடுத்துள்ளார். இவர் தனது மகளை பார்ப்பதற்காக கீழ் எடையாளத்தில் இருந்து தென்களவாய் பகுதிக்கு விவசாய நிலப்பகுதியில் குறுக்கு வழியாக நடந்து செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று அதிகாலை தென்களவாய் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரது விவசாய கிணற்றில் மூதாட்டி தலைகுப்புற விழுந்த நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் மயிலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் திண்டிவனம் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மூதாட்டியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மயிலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>