தீ விபத்தில் கரும்பு பயிர் எரிந்து நாசம்

பண்ருட்டி, பிப். 21:  பண்ருட்டி அருகே அங்குசெட்டிப்பாளையம், சிறுவத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் விளைந்துள்ள கரும்புகளை அறுவடை செய்ய இயந்திரங்கள், பணியாளர்கள் இல்லாததால் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கரும்பு வெட்டுவதற்கு உரிய அனுமதி பெற்றும் தொழிலாளர்கள் இல்லாததால் கரும்பை வெட்ட முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று அங்குசெட்டிப்பாளையத்தில் சிதம்பரம் என்பவரின் 6 ஏக்கர் கரும்பு தோட்டத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த பண்ருட்டி தீயனைப்புத்துறையினர் சம்பவ இடம் விரைந்து சென்று தீயை அனைத்தனர். இதில் போதிய அளவு தண்ணீர் இருப்பு இல்லாததால் தீயை அணைக்க முடியவில்லை. இதன் காரணமாக விவசாயிகள் தங்கள் நிலங்களிலிருந்து பிளாஸ்டிக் குடம் மூலம் தண்ணீர் எடுத்து வந்து தீயை அணைத்தனர். இதில் சுமார் ரூ.4 லட்சம் மதிப்பிலான கரும்புகள் எரிந்து நாசமானது.

Related Stories:

>