நீதிபதிகள், வக்கீல்கள் கிரிக்கெட் போட்டி வழக்கறிஞர்கள் அணி வெற்றி

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே நல்லுறவை வலுப்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக 4ம் ஆண்டாக நேற்று 20/20 கிரிக்கெட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தலைமையிலான அணிக்கும், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் தலைமையிலான அணிக்கும் இடையே நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த வழக்கறிஞர்கள் அணி 20 ஓவருக்கு 144 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, களமிறங்கிய நீதிபதிகள் அணி 20 ஓவருக்கு 105 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதையடுத்து, 40 ரன்கள் வித்தியாசத்தில் வழக்கறிஞர்கள் அணி வெற்றி பெற்றது. தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆகியோர் போட்டி குறித்து பேசுகையில், ‘வழக்க

மான நீதிமன்ற பணிகளுக்கு நடுவே நடந்த கிரிக்கெட் போட்டி புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. நீதிபதிகள்- வழக்கறிஞர்கள் இடையே நல்லுணர்வை ஏற்படுத்த வாய்ப்பாக அமைந்தது என்றனர். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா தனது முதல் வெற்றியை பதிவு செய்த 1952ம் ஆண்டில், இந்தியா - இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்ற இந்திய அணியின் வீரர்களுள் ஒருவரான சி.டி.கோபிநாத் போட்டியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பரிசு கோப்பையை வழங்கினார்.

Related Stories: