மேம்பால செங்குத்து பூங்காக்களில் தத்தெடுப்பு முறையில் பராமரிப்பு பணி

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மேம்பாலங்களில் உள்ள செங்குத்து பூங்காக்களில் தத்தெடுப்பு முறையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள பெரு வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், மருத்துவமனை, அமைப்புகள், குடியிருப்பு நலச் சங்கங்கள், அறக்கட்டளை மற்றும் பொதுமக்கள் ஆகியோர் வரவேற்கப்படுகின்றனர். அவ்வாறு முன்வருபவர்களுக்கு பிணை வைப்பு தொகை முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. நிறுவனங்கள், அமைப்புகளின் பெயர் பலகைகள் பூங்காக்களில் அமைக்க அனுமதி அளிக்கப்படுகிறது.  

இதுகுறித்த விவரங்களுக்கு ரிப்பன் மாளிகை வளாகத்திலுள்ள அம்மா மாளிகையில் உள்ள பாலங்கள் துறையினை நேரில் அணுகி அல்லது மாநகராட்சி இணையதளத்தில் www.chennaicorporation.gov.in உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கீழ்க்கண்ட மின்னஞ்சல் மூலம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் வரும் 26ம் தேதி. செயற்பொறியாளர், பாலங்கள் துறை அலுவலகம், மாநகராட்சி, 4கி, 4வது தளம், அம்மா மாளிகை, ரிப்பன் மாளிகை வளாகம், சென்னை - 600 003. தொலைபேசி எண். 044-2530 3847 மின்னஞ்சல் முகவரி: bridgesverticalgarden@gmail.com. என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Related Stories: