பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து தபெதிகவினர் பலூன் பறக்கவிட்டு ஆர்ப்பாட்டம்

திருப்பூர், பிப். 21:  திருப்பூரில், பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வுக்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர்(தபெதிக) பலூன்களை பறக்கவிட்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூரில், பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வுக்கு எதிராக தந்தை  பெரியார் திராவிடர் கழகத்தினர் பலூன்களை பறக்கவிட்டு நூதன ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர். திருப்பூர் மாநகராட்சி எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தபெதிக மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் அங்ககுமார் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது, பெட்ரோல் டீசல் மற்றும் காஸ் விலையை கடுமையாக உயத்தியிருப்பது பொதுமக்களை வாட்டி வதைக்கிறது. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு, பலரும் வருவாய் இன்றி தவித்து வரும் நிலையில், மக்களின் அத்தியாவசியப் பொருட்களின் விலையை கடுமையாக மத்திய பாஜ அரசு உயர்த்தி உள்ளது.

காஸ் விலை உயர்வு விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்திருப்பதை சுட்டிக்காட்டும் வகையில், பலூன்களில் சமையல் காஸ் சிலிண்டர் மாதிரி அட்டைகளை கட்டி அதை வானில் பறக்கவிட்டு அனைவரது கவனத்தை ஈர்த்தனர். இதில் மாநகர் மாவட்ட தலைவர் முத்துக்குமார், ஆதித்தமிழர் பேரவை துணை பொதுச் செயலாளர் விடுதலை செல்வன், சமூக விடுதலைக் கட்சியின் ஆறுமுகம் உட்பட பலர் முன்னிலை வகித்தனர். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினார்கள்.

Related Stories: