10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 4வது நாளாக வருவாய்த்துறையினர் ஸ்டிரைக்

திருப்பூர், பிப். 21: வருவாய்த்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று 4வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய்த்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது உட்பட 10 அம்ச  கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கடந்த 3 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று 4ம் நாளாக போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இதனால், வேலை நிறுத்த போராட்டத்தால் அனைத்து வருவாய்த்துறை அலுவலகங்களும் வெறிச்சோடி காணப்பட்டது. வருவாய்த்துறையினர் வலியுறுத்தும் கோரிக்ைககள்:

வருவாய்த்துறையில் பணிபுரியும் அலுவலக உதவியாளர் முதல்  வட்டாட்சியர் வரை உள்ள அனைவருக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம்  வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டவர்களது  பணியினை வரன்முறை செய்யும் அதிகாரத்தை கலெக்டர்களுக்கு வழங்க வேண்டும்.  வருவாய்த்துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவுக் காவலர், மசால்ஜி,  பதிவறை எழுத்தர் மற்றும் ஈப்பு ஓட்டுநர் பணியிடங்களை உடனடியாக நிரந்தர  அடிப்படையில் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  நேற்று 4வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: