ஆதிவாசி கிராமங்களில் அதிகாரிகள் ஆய்வு தேயிலைத்தூள் உற்பத்தி பாதிப்பு தொழிலாளர்கள் வேலையிழப்பு

பந்தலூர்,பிப்.21:கேரள மாநிலம் வயநாடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில், தமிழக எல்லைப்பகுதில் உள்ள ஆதிவாசி கிராமங்களில் மாவோயிஸ்டுகள் ஊடுருவலை தடுப்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆதிவாசி கிராமங்களில் அனைத்து துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆதிவாசி மக்களின் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில் நேற்று பந்தலூர் அருகே நெலாக்கோட்டை ஊராட்சி பாலவயல்,எருமைக்குளம்,கருத்தாடு உள்ளிட்ட ஆதிவாசி கிராமங்களில் மக்களை சந்தித்து அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். குடிநீர்வசதி,சாலைவசதி,தெருவிளக்கு வசதி,கழிப்பிட வசதி உள்ளிட்ட குறித்த கோரிக்கை மனுக்களை ஆதிவாசி மக்கள் ஆதிகாரிகளிடம் வழங்கினர்.நிகழ்ச்சியில் கூடலூர் கோட்டாட்சியர் ராஜ்குமார்,பந்தலூர் டிஎஸ்பி அமிர்அகமது, பந்தலூர் துணை வட்டாட்சியர் சாந்தி, பழங்குடியினர் நலத்துறை தனி வட்டாட்சியர் சித்தராஜ்,பிதர்காடு ரேஞ்சர் மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: