ஊட்டி - மஞ்சூர் சாலையில் டாஸ்மாக் கடையால் போக்குவரத்து நெரிசல்

ஊட்டி, பிப்.21:  தேசிய நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகளை திறக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதைத்தொடர்ந்து, அங்கிருந்த டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டன. இதனால், விபத்துகளும் குறைந்தது. ஊட்டியில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் தேவர்சோலை பகுதியில் சாலையோரத்திலேயே டாஸ்மாக் கடை உள்ளது. குறுகிய மற்றும் வளைவுகள் கொண்ட இடத்தில் இக்கடை உள்ளது. மதுவை வாங்கிக் கொண்டு கடைகளில் இருந்து வெளியே வரும் குடிமகன்கள், சாலையில் தள்ளாடி செல்கின்றனர். வாகனங்களுக்கு வழி விடாமல் சாலையிலேயே நின்று கொண்டும், வாகனங்களுக்கு வழிவிடாமல் சாலையின் நடுவே தடுமாறி நடந்துச் செல்வதும் வாடிக்கையாகிவிட்டது. இதுமட்டுமின்றி, இங்கு குடிக்க வரும் சிலர் இரு சக்கர வாகனம் முதல் கனரக வாகனம் வரை சாலைகளிலேயே நிறுத்துகின்றனர். இதனால், போக்குவரத்துக்கு தடை ஏற்படுவதுடன் சில சமயங்களில் ஓட்டுநர்களிடையே வாக்குவாதமும் ஏற்படுகிறது. எனவே, ஊட்டி - மஞ்சூர் சாலையோரத்தில் வைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: