சென்னை: தங்கம் விலை வார இறுதி நாளான நேற்று பவுனுக்கு ரூ.200 குறைந்தது. தங்கம் விலை கடந்த ஒரு மாதமாக ஒரு நாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதுமான நிலையில் இருந்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் தங்கம் விலை உயர்ந்தது. அதாவது கிராமுக்கு ரூ.125 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,125க்கும், பவுனுக்கு ரூ.1,000 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 13,000க்கும் விற்பனையானது. வெள்ளி விலையை பொறுத்தவரையில் கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் உயர்ந்து, பார் வெள்ளி ரூ.2.65 லட்சத்துக்கு விற்பனையானது.
இந்நிலையில் வாரத்தின் இறுதி நாளான நேற்று தங்கம் விலை சற்று குறைந்தது. அதாவது கிராமுக்கு ரூ.25 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,100க்கும், பவுனுக்கு ரூ.200 குறைந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 12,800க்கும் விற்பனையானது. வெள்ளி விலையில் நேற்று எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.265க்கும், பார் வெள்ளி ரூ.2.65 லட்சத்துக்கும் விற்பனையானது.
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். நாளை (திங்கட்கிழமை) மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.
