ஈரோடு மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் இன்று முதல் 2 நாட்கள் தேர்தல் பிரசாரம்

ஈரோடு, பிப். 21:  தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேற்கு மண்டலத்தில் தேர்தல் பிரசாரத்தை நேற்று முன்தினம் தொடங்கிய ஸ்டாலின், ஈரோடு மாவட்டத்தில் 2 நாள் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இன்று 21ம் தேதி மதியம் 1 மணிக்கு ஈரோடு தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட பெருந்துறையில் கடப்பமடை கிராமத்தில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தும், மனுக்களாக பெற்றும் சிறப்புரையாற்றுகிறார். இக்கூட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பொதுமக்கள், கட்சியினர் கலந்துகொள்ள உள்ளனர்.

இதைத்தொடர்ந்து பெருந்துறையில் உள்ள திருமண மண்டபத்தில் மேற்கு மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளை நேரில் சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிவதோடு, மனுக்களையும் பெற உள்ளார். முதல்நாள் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு இரவு ஈரோட்டில் தங்கும் மு.க.ஸ்டாலின் நாளை (22ம் தேதி) காலை 8 மணிக்கு, கோபி அடுத்துள்ள பங்களாபுதூரில் நடைபெற உள்ள கூட்டத்தில், தி.மு.க. ஈரோடு வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட பவானி, அந்தியூர், கோபி, பவானிசாகர் மற்றும் சேலம் மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் குறைகேட்பு மனுக்களை பெற்று சிறப்புரையாற்றுகிறார். தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர்கள் முத்துசாமி, நல்லசிவம் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளைக்கழக, அணி நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: