திருத்துறைப்பூண்டி, ஏப். 11: திருத்துறைப்பூண்டி அருகே உரிய ஆவணமின்றி டூவீலரில் எடுத்து சென்ற ரூ.82,920ஐ தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தமிழ்நாட்டில் வரும் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிலையான கண்காணிப்பு குழு மற்றும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனைகள் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று திருத்துறைப்பூண்டி அருகாலத்தம்பாடி பகுதியில் நிலையான கண்காணிப்பு குழுவினர் ரமேஷ்குமார் மற்றும பரவக்கோட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் புனிதகுமார் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திருத்துறைப்பூண்டி சாலைவழியாக வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்ததில் உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட கரூர் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரிடம் ரூ.82 ஆயிரத்து 920 பறிமுதல் செய்து திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் செல்வபாண்டி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தாசில்தார் செந்தில்குமார் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.
